'நைட் பார்ட்டி இருக்கு, மறக்காம வந்திரு...' 'ஏழு பேர் சேர்ந்து, 12 வயது சிறுமியை...' பத்தாம் வகுப்பு மாணவர்கள் செய்த பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா12 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று மரத்தில் தொடங்கவிடப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில், மேலும் அதிர்ச்சியாக இந்த பாலியல் வன்கொடுமையை செய்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தின் சக்லா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை அன்று 12 வயது சிறுமி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் அம்மாநிலத்தையெ உலுக்கியது.
வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை, பார்ட்டி என சில மாணவர்கள் அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் பார்ட்டிக்கு அழைத்த மாணவர்களை தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த 7 பேர் தப்பியுள்ளனர்.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஏழு மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். பார்ட்டி என்று அழைத்துச் சென்று, அந்த சிறுமியை அவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்து மரத்தில் தொடங்கவிட்டுள்ளாதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான மாணவர்கள் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
