சக குற்றவாளியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டேன்.... நிர்பயா குற்றவாளி மனு... தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு...
முகப்பு > செய்திகள் > இந்தியாதிகார் சிறையில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங், தனது கருணை மனு நிராகரிப்பை நீதித்துறை மறுஆய்வு செய்யக் கோரி கடந்த 25ஆம்தேதி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
முகேஷ் சிங், சார்பில் அவரது வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில், திகார் சிறையில் சக குற்றவாளியான அக்ஷய்யுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். பல முறை தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், தான் கூறிய எதுவும் குடியரசுத் தலைவர் பார்வைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
திகார் சிறை அலுவலர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முகேஷ் தரப்பு வழக்கறிஞர், "மற்ற சிறைக் கைதிகளுக்கு முன் மனுதாரர் உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு மரண தண்டனைதான் விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும் என்றா தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது?" என்று வாதாடினார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்தது சரியே என கூறி உள்ளனர். கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதியின் முடிவும், உள்துறை அமைச்சகத்தின் ஆவணங்களும் திருப்தியாக இருந்தன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
