'பேய் இருக்குன்னு சொன்னதெல்லாம் அந்தக் காலம்...' இப்போ வேப்பமரத்துல என்ன வருது தெரியுமா...? சுவாரஸ்யமான சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 13, 2020 01:04 PM

வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசய நிகழ்வு தூத்துக்குடி பகுதியில் நிகழ்ந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

There is a miraculous phenomenon in Thoothukudi.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்திலிருந்து பால் வடிகிறது என்ற தகவல் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. வேப்ப மரத்திலிருந்து பால் வடிவதை சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சிலர் ஆன்மீக ரீதியாக பரவசமடைந்தனர். வேப்பமரத்தில் பேய் இருக்கு என்று சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், வேப்பமரத்திருந்து பால் வடிவது மிகுந்த ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி அருகே உள்ள சாலையின் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து இன்று காலை பால் வடிய தொடங்கியதால் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த பலர் அதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த செல்போனில் அந்த காட்சியை படம் எடுத்தனர். வேப்பமரத்தில் இருந்து பால் வடிவத்தை பார்க்க பிற பகுதிகளிலிருந்து மக்கள் வந்து குவிகின்றனர்.

Tags : #NEEMTREE