"டெல்லியை 'பாரிஸ்' போன்று மாற்றுவோம்" "ஓ... வாவ்... சூப்பர்..." "அப்டின்னு மட்டும் பொய் சொல்ல மாட்டோம்..." காம்பீரின் அல்டிமேட் விமர்சனம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 21, 2020 12:06 PM

டெல்லியை பாரிஸ் நகரைப் போன்று மாற்றுவோம் என ஆம் ஆத்மியை போல் பொய் சொல்ல மாட்டோம் என கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர்  விமர்சித்து பேசியுள்ளார்.

We will not lie that Delhi will be transformed into Paris-gambhir

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், ஆம் ஆத்மி கட்சியும் பா.ஜ.க-வும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்துப் பேசியுள்ளார்.

டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நாட்டின் தலைநகரை லண்டனாக அல்லது பாரிஸாக மாற்றுவோம் போன்ற பொய்யான வாக்குறுதிகளை கூறமாட்டோம் எனக் கூறினார். டெல்லியை சிறந்த மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றுவோம். எதை எங்களால் செய்ய முடியுமோ அதை மட்டுமே உறுதியாகச் சொல்வோம் என்றும் குறிப்பிட்டார்.  கடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்குத் மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளார் என்றும் விமர்சித்து பேசினார்.

Tags : #GAUTAMGAMBHIR #GAMBHIR #DELHI #BJP #AAM ATHMI #KEJRIWAL #PARIS #TRANSFORM