darbar USA others

'நிர்பயா' குற்றவாளிகளுக்கு உறுதியானது தூக்கு... 'ஒத்திகை' பார்த்த திகார் சிறை நிர்வாகம்... '22ம் தேதி' காலை 7 மணிக்கு தூக்கு

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 14, 2020 06:00 PM

மருத்துவ மாணவி, 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரை துாக்கிலிடுவது குறித்த ஒத்திகை, திகார் சிறையில் நேற்று நடத்தப்பட்டது.

rehearsal of the four accused in the Nirbhaya case

டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன், 'மைனர்' என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டான். ராம்சிங் என்ற குற்றவாளி, திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

முகேஷ், 32, பவன் குப்தா, 25, வினய் சர்மா, 26, அக் ஷய் குமார் சிங், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் வினய் குமார் சர்மா மற்றும் முகேஷ் சர்மா, தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில், தாக்கல் செய்த கியூரேட்டிவ் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து வரும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, டில்லி திகார் சிறையில், சிறை எண், 3ல், இவர்களுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இதற்கான, 'வாரன்ட்' இவர்களுக்கு தரப்பட்டுள்ளது. திகார் சிறையில் துாக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர் இல்லாததால், உத்தர பிரதேச மாநிலம், மீரட் சிறையிலிருந்து, பவன் ஜலாத் என்ற ஊழியர், திகார் சிறைக்கு வரவுள்ளார்.

இதற்கிடையே, திகார் சிறையில், நான்கு பேரையும் துாக்கிலிடுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சிறை அதிகாரிகள் முன் நடத்தப்பட்டது. முன்னதாக, குற்றவாளிகள் நான்கு பேரின் எடை கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ற கற்கள் அடுக்கப்பட்டு, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்படும்போது, எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்க, ஒத்திகை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்டனை நிறைவேற்றப்படும்போது, குற்றவாளிகளின் மனநிலை மற்றும் உடல்நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே, நான்கு பேரிடமும், சிறை அதிகாரிகள், தொடர்ந்து இயல்பாக பேசி வருகின்றனர்.

Tags : #NIRBHAYA #REHEARSAL #DELHI #THIHAR