'திடீரென்று நடுரோட்டில் தரையிறங்கிய விமானம்!'...'இறக்கை முறிந்து'... 'டெல்லியில் பரபரப்பு!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇயந்திர கோளாறு காரணமாக பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, Eastern Peripheral எக்ஸ்பிரஸ்வே சாலை. சுமார் 135 கி.மீ நீளம் கொண்ட இந்த 6 வழி எக்ஸ்பிரஸ்வே ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலைங்களை இணைக்கிறது.
நேற்று மதியம் 1.45 அளவில் இருவர் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று, இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இயந்திர கோளாறு காரணமாக சாலையில் இறக்கப்பட்ட இந்த விமானத்தில் இருந்த விமானிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
எனினும், விமானத்தின் இடது பக்க இறக்கை மற்றும் முன்பக்க வீல் போன்றவை சிறிதளவு சேதமடைந்துள்ளது. அவசரமாக தரையிறக்கப்பட்டாலும், சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற வாகனங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
திடீரென தரையிறங்கிய விமானத்தை அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுச் சென்றனர். இந்த விமானம் தேசிய மாணவர் படைக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
