சிறுமிகளைக் கடத்தி கட்டாய மதமாற்றம் செய்த கும்பல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | Mar 25, 2019 09:04 PM

 

Teenage girls kidnapped and forced to conversion from hindu to muslim

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகையின் போது இந்து சிறுமிகளைக் கடத்திக் கட்டாய மதமாற்றம் செய்ய வைத்த கும்பல்.

சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீனா, ரீனா ஆகிய இரண்டு சிறுமிகள் கும்பலால் கடத்தப்பட்டு, பின்னர் அவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டத்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடத்தல் கும்பல் வெளியிட்ட வீடியோவில் அந்த சிறுமிகள் தங்களது விருப்பத்தின் பேரிலேயே தான் நாங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக கூறினர்.

மேலும், சிறுமிகளின் குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், சிறுமிகள் மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் ஆணையத்திடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

 

 

Tags : #PAKISTAN #SUSHMA SWARAJ #IMRAN KHAN #INDIA