நாட்டிலேயே சிறந்த முதல்வர் யார் தெரியுமா? இதோ கருத்துகணிப்பு முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | Mar 22, 2019 10:41 PM

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் உள்ள மாநிலங்களில் எந்த மாநில முதல்வரின் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன் வைத்து சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.

who is the best chief minister in india.

இதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் செயல்பாடு சிறப்பானதாகவும், மனநிறைவு தருவதாகவும் வாக்காளர்கள் அவருக்கு முதலிடம் அளித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பில் 79.2 சதவிதம்  பேர் அவரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 2வது இடத்திலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முறையே 3, 4வது இடத்தில் உள்ளனர். மேலும், 10 வது இடத்தில் அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவாலும், 11 வது இடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உள்ளனர். 

இந்த வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி இடத்தில் உள்ளார். நாட்டிலேயே மிக மோசமான செயல்பாடு கொண்ட முதல்வராக இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHEIF MINISTER #INDIA