ஆமா!...இவர் எங்க நாட்டுல தான் இருக்கார்...பாகிஸ்தான் வெளியிட்டிருக்கும் பரபரப்பு அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 01, 2019 12:25 PM
புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார்,தங்கள் நாட்டில் தான் இருக்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார்.அவரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.இந்நிலையில் அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசார்,தங்கள் நாட்டில் தான் இருக்கிறார் என்பதை,பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை எனவும்,அதனால் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மசூத் அசாருக்கு எதிரான ஆதாரங்களை இந்திய ராணுவம் அளித்தால் நங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அசாருக்கு எதிராக இருக்கும் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்,அவர் நிச்சயம் நீதிமன்றம் மூலம் கடுமையாக தண்டிக்கப்படுவர் என,ஷா மசூத் குரேஷி உறுதிபட தெரிவித்துள்ளார்.