‘இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்னப்பா செய்றது?’: கதறும் தேர்தல் உதவி மையம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | Mar 20, 2019 03:51 PM
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க நாடு முழுவதும் தேர்தல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் உதவி மையத்தில் பல வேடிக்கையான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மக்கள் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை ‘1950’ என்ற எண்ணிற்கு அழைத்து தங்களுக்குரிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் தேர்தலுக்கு சம்மந்தம் இல்லாத கேள்விகளாகத்தான் இந்த மையத்திற்கு வருவதாக கூறப்படுகிறது.
உதாரணமாக ஹரியாணா மாநிலம் ஹிஸா நகரில் உள்ள தேர்தல் மையத்தை அழைத்த நபர் ஆரஞ்சு மரக்கன்றுகள் எவ்வளவு விலை, அவை எங்கு கிடைக்கும் எனக் கேட்டுள்ளார். மற்றொரு நபர், எங்கள் கிராமத்திற்கு எந்த கட்சி மின்சாரம் வழங்குகிறதோ, அந்த கட்சிக்குதான் நாங்கள் வாக்களிப்போம் என கூறியுள்ளார்.
இவ்வாறு அகராதி பிடித்த கேள்விகள் கேட்பதற்கென்றே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட போன் கால்கள் வருவதாக, இந்த தேர்தல் உதவி மையத்தில் பணிபுரிவோர் கூறுகின்றனர்.