'இன்னும் சில மணி நேரம்'!...'பெண்கள்,குழந்தைகள் புடைசூழ வாகா எல்லை...வீர திருமகனே வருக!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 01, 2019 04:43 PM

பாகிஸ்தானிலிருந்து இன்று இந்தியா திரும்ப உள்ள அபிநந்தனை வரவேற்க வாகாவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் வாகா எல்லையில் குவிந்துள்ளார்கள்.இன்னும் சில மணி நேரங்களில் அவர் இந்தியவிடம் ஓப்படைக்கப்பட இருக்கிறார்.

Wing Commander Abhinandan will be released at the Wagah shortly

ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்த இந்திய கமாண்டர் அபிநந்தன் விமானம் மூலம் லாகூர் வந்தடைந்தார்.அங்கிருந்து சாலை வழியாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட இருக்கிறார்.இது தொடர்பான இறுதி கட்ட பணிகளில் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனிடையே அபிநந்தனை வரவேற்பதற்காக ஏராளமான மக்கள் வாகா எல்லையில் குவிந்திருக்கிறார்கள்.அதே நேரத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் குவிந்திருக்கிறார்கள்.அவரை வரவேற்பதற்கு பஞ்சாப் முதலமைச்சரான அமரீந்தர் சிங் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.அவர் எப்போது வாகா எல்லைக்கு வருவார் என்ற உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.அவர் லாகூர் வந்த பின்பு அதற்கான நேரம் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

Tags : #CRPFJAWANS #INDIANAIRFORCE #PAKISTAN #WING COMMANDER ABHINANDAN