இந்த நவின உலகத்துலையுமா இப்படி! சாத்தானிடமிருந்து பாதுகாக்க தன் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து அடித்த கணவர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | Mar 25, 2019 06:23 PM

 

husband tortured his wife by locked her with the steel chain.

சாத்தானிடமிருந்து பாதுகாக்க தன் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து அடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சாக்வால் நகரில் தன் மனைவியை சாத்தானிடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி சங்கிலியால் கட்டிப் போட்டுப் பல வாரங்களாக சித்தரவதை செய்து வந்த கணவரை காவல்துறை கைது செய்து அந்தப் பெண்னைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் காவல்துறை அதிகாரிகளிடம் தன்னுடைய கணவரும், மாமியாரும் தன்னை சங்கிலியால் கட்டி வைத்து அடித்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

சாத்தான்களிடமிருந்து பாதுகாக்கவே அவளை சங்கிலியால் பூட்டியதாகவும் அன்றாடம் அடித்ததாகவும் காவல்துறையினரிடம் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணிண் கணவர் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஆரம்பத்தில் அவள் ஒரு மனநோயாளியாக இருந்ததாக அந்த பெண்ணின் கணவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கணவரின் இந்த புகாரை அவர் நிராகரித்துள்ளார். மேலும்,தன்னிடமிருந்து தன்னுடைய கைக் குழந்தை உட்பட இரண்டு குழந்தைகளையும் தன் கணவர் மற்றும் மாமியார் பிரித்துவிட்டதாகவும் அந்த பெண் போலீஸாரிடம் தெரிவித்ததாகவும். இப்போது அந்த பெண் போலீஸ் காவலில் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து விசாரணை அதிகாரியான அஃப்சல் கில் டான் செய்தி சேனலிடம் தெரிவித்த போது, அந்த பெண்ணிற்கு மனநிலை ஆரோக்கியம் தேவை என்றும். மேலும்,அந்த இரண்டு குழந்தைகள் கணவனின் குடும்பத்தாரிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : #WOMAN TORTURE #PAKISTAN