காங்கிரஸ் ஜெயித்தால்! பாகிஸ்தானுக்கு தீபாவளி பாஜக மூத்த தலைவர் சர்ச்சைப் பேச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | Mar 25, 2019 07:32 PM

 

bjp cm vijay rupani blames congress is the main reason for terrorism

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அது பாகிஸ்தானுக்கு தீபாவளியாக இருக்கும் என, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், மெக்சானா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக தாக்கிப் பேசினார்,அதில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பயங்கரவாதிகள் பலர் விடுவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் மாதம் நடைப்பெறயிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அது பாகிஸ்தானுக்கு தீபாவளியாக இருக்கும் என்றும் எனவே இந்தியா தலைநிமிர பாஜகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், காங்கிரஸ் ஓட்டு வங்கி மற்றும் அரசியலுக்காக காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்ததாகவும், ஆனால் பா.ஜ.க. அரசு அந்த இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மோடியைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் விஜய் ரூபானி குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #BJP #CONGRESS