விமானத்திலிருந்து 'அபிநந்தன்' அனுப்பிய கடைசி செய்தி என்ன?...வெளியான புதிய தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 04, 2019 10:56 AM
அபிநந்தனின் விமானம் தாக்கப்படுவதற்கு முன்பு அவர் அனுப்பிய ரேடியோ செய்தி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தற்போது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் தற்போது முழுவதுமாக ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளார்.அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.மேலும் அவரது உடலில் ஏதேனும் உளவு பார்க்க உதவும் சிப்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே அவர் பாரசூட்டில் இருந்து குதிக்கும் போது,பின் முதுகெலும்பு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இருப்பினும் அவர் விரைவில் பணிக்கு திரும்பி விமானத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாக,மருத்துவர்களிடம் அபிநந்தன் தெரிவித்ததாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் அபிநந்தனின் விமானம் தாக்கப்படுவதற்கு முன்பு அவர் அனுப்பிய கடைசி ரேடியோ செய்தி என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது.அதில் '' நான் 73 ஏவுகணையை தேர்வு செய்து விட்டேன்'' என்பதே அந்த கடைசி ரேடியோ செய்தியாகும்.
MIG 21 BISON போர் விமானத்தில் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், விய்ம்பெல் ஆர் 73 ரக ஏவுகணையை பயன்படுத்தி பாகிஸ்தானின் எஃப் 16 விமானத்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.