'அபிநந்தனுடன் வந்த பெண் யாரு'?...வழக்கம்போல் வதந்தியை கிளப்பிவிட்ட...'போலி நெட்டிசன்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 02, 2019 12:31 PM

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது நேற்றைய தினம்.ஒட்டு மொத்த நாடே ஒரு தனி மனிதனின் வரவிற்காக தவியாய் தவித்து கொண்டிருந்தது என சொல்லலாம்.அவர் தான் விங் கமாண்டர் அபிநந்தன்.

Who was the woman walking with Abhinandan at Wagah border

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விங் காமாண்டர் அபிநந்தன் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்க படுவார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தார்.பிற்பகலே அவர் விடுவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் மற்றும் பத்திரிகை துறையை சேர்ந்தவர்கள் வாகா - அட்டாரி எல்லையில் குவிய ஆரம்பித்தார்கள்.இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பிற்பகல் முடிந்து மாலை நேரம் வந்தது.ஆனால் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை.இதனால் பரபரப்பு மேலும் தொற்றி கொண்டது.இதனையடுத்து ஒரு வழியாக அவரை ஒப்படைப்பதற்கான வழிமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில்,இரவு 9 மணியளவில் வாகா - அட்டாரி எல்லை வழியாக தாய் மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.அவரை இந்திய ராணுவ அதிகாரிகள் கைகுலுக்கி வரவேற்றார்கள்.

இதனிடையே அவர் இந்தியா வந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவியது.அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் போது அபிநந்தனுடன் ஒரு பெண் வந்தார்.அவர் அபிநந்தனின் மனைவி என சிலர் கிளப்பிவிட,அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது.ஆனால் அது உண்மை அல்ல,அவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி என்பது பின்பு தெளிவுபடுத்தப்பட்டது.

இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவோர்களில் சிலர் இந்திய அயல்நாட்டு பணியினை(IFS) தேர்வு செய்வார்கள்.அவர்கள் இந்திய வெளியுறவு துறையில் பணியாற்றுவார்கள்.அதே போன்று பாகிஸ்தான் வெளியுறவு துறையில் பணியாற்றும் அதிகாரி தான் அந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #INDIANAIRFORCE #INDIANMILITARY #PAKISTAN #TWITTER #ABHINANDAN VARTHAMAN #IAF PILOT #WAGAH BORDER