‘உலகிலேயே குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடு’.. ஆய்வில் வெளியான தகவல்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Mar 06, 2019 03:57 PM

உலகளவில் இந்தியாவில் தான் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

India offers some of the world\'s cheapest mobile data packs

சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சுமார் 230 நாடுகளில் மொபைல் டேட்டா குறித்து ஆய்வை நடத்தியுள்ளது. அதில் இந்தியாவில் தான் குறைந்த விலையில் மொபைல் டேட்டா கிடைப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.18.33($0.26) ரூபாயில் 1 ஜி.பி மொபைல் டேட்டா கிடைப்பதாக அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் 1 ஜி.பி மொபைல் டேட்டாவின் விலை சராசரியாக ரூ.872 ($12.37) ரூபாய் எனவும், பிரிட்டனில் 1 ஜி.பி மொபைல் டேட்டாவின் விலை ரூ. 469($6.66) எனவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் மொபைல் டேட்டாவை வழங்கும் நாடுகளில் இந்தியா, கிர்கிஸ்தான், கஸக்ஸ்தான், உக்ரைன், ரூவாண்டா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

கடந்த 2016 -ம் ஆண்டு ஜியோ நிறுவனம் 4ஜி டேட்டாவை இலவசமாக தந்ததன் விளைவாக பல நெட்வொர்க்குகள், ஜியோக்கு இணையாக பல சலுகைகளை பயணாளர்களுக்கு வழங்க ஆரம்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #INDIA #INTERNET #DATA