‘பத்திரமா ஒப்படைக்க வலியுறுத்தி பாகிஸ்தான் மக்கள் போராட்டம்’: நெகிழும் இந்தியர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 28, 2019 06:07 PM

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியதை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைச் சண்டை மூண்டது.

\'we demand safe return\', PAK people protest outside Lahore Press Club

இதன் அடுத்தடுத்த கட்டங்கள் வளர்ந்த நிலையில் பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதலை புரியச் சென்றதாக இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தான் மக்களால் பிடிக்கப்பட்டு, பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கவும் தொடங்கியது.

பின்னர் அபிநந்தன் நலமுடன் இருப்பதற்கான ஆதாரமாக அவரே பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் பேசிய வீடியோ வெளிவந்தது. இந்த நிலையில் அவரை நாளை விடுவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

முன்னதாக பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பத்திரமாக விடுவிக்கப்பட்டு தாயகத்திடம் ஒப்படைத்து இரு நாடுகளின் அமைதியை காக்க வேண்டும் என்று, பாகிஸ்தானின் லாஹூர் பிரஸ் கிளப்பின் முன்னர் அமைதிப்போராட்டம் நிகழ்ந்தது. இதனிடையே இந்த விடுதலை செய்தியை அறிந்தவுடன், அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க அம்மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‘we demand safe return of abhinandan’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி பாகிஸ்தானில் குரல்கொடுத்த மக்களின் பேரன்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்தியர்கள் நெகிழ்ந்துருகி வருகின்றனர்.

Tags : #ANTIHATECHALLENGE #PEACE #PAKISTAN #LAHOREPRESSCLUB #AIRSTRIKE #ABHINANDAN