'ஆரத்தி எடுத்தால் தலைக்கு 50 ரூபாய்'... கிழிந்த ரூபாய் தாள்களால் ஏமாற்றம்... கட்சி நிர்வாகிகளை திட்டும் பெண்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 02, 2019 04:22 PM

தேர்தல் பிரச்சாரத்தில் ஆரத்தி எடுத்தப் பெண்களுக்கு, கிழிந்த ரூபாய் தாள்களை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக, பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

50 rupees notes was given damaged karur ladies anger in admk campaign

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, தேர்தல் பிரச்சாரம் போகும் இடங்களில் எல்லாம், அவரை ஆரத்தி எடுத்து வரவேற்க, அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்களே, தலைக்கு 50 ரூபாய் கொடுத்து பெண்களை தயார்படுத்துவதாக  கூறப்படுகிறது.

அவ்வாறு, கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் உள்ள வெள்ளியம்பாளையம் காலனிப் பகுதியில் தம்பிதுரை பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவருக்கு ஆரத்தி எடுத்தப் பெண்கள் சிலருக்கு, கிழிந்த ஐம்பது ரூபாய் தாள்களை வழங்கிவிட்டதாக சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் கூறியுள்ளனர்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையும், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஜோதிமணியும் களம் காண்கின்றனர்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #THAMBIDURAI #KARUR #WOMEN #ANGRY #RUPEES