உ.பியில் கொடூரம்: சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | Mar 19, 2019 03:14 PM

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் தலித் சமுதாயத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஐந்து பேர் கொண்ட கும்பலால்  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார்.

Minor Girl Gang raped by 5 men in muzaffarnagar

முசாபர்நகர் புலலாட் கிராமத்தில் 17 வயது சிறுமி வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை தனித்தனியாகவும் கூட்டாகவும் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். பின்னர், காயங்களுடன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி நடந்ததை தன் அண்ணனிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் அண்ணன் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் விசாரனையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர் மற்ற 2 பேர் தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தலைமறைவாகியிருந்த அந்த 2 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள மக்கள் முசாபர்நகர் என்பது பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நகரமாகிவிட்டதாக எண்ணி அச்சம் அடைந்துள்ளனர்.

Tags : #RAPE #GANG RAPE #MINOR GIRL #MUZAFFARNAGAR