'பொள்ளாச்சி பாலியல் வன்மம்'...காமுகர்களை புரட்டி எடுத்த பொதுமக்கள்...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 13, 2019 10:54 AM

உலகெமெங்கும் இருக்கும் தமிழகர்கள் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் சம்பவம் தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்.இளம் பெண்களை மிரட்டியும்,அடித்தும் காமுகர்கள் எடுத்த வீடியோ மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில்,அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

Pollachi people Assaulting Rape Criminals video goes viral

இதனிடையே காமுகர்கள் சபரி, மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரை பொதுமக்கள் விசாரிக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளைங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த வீடியோவில் சபரி, மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரை இளைஞர்கள் சிலர் விசாரிக்கின்றனர்.

அப்போது 'நாங்கள் பல பெண்களை வீடியோ எடுத்திருப்பதாக' அந்த இரண்டு காமுகர்கள் ஒப்புக்கொள்வது பதிவாகியுள்ளது.இந்த வீடியோவினை ஆதாரமாக கொண்டு விசாரணையை துரித படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சரமாரியாக அடிவாங்கும் சபரி, மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #SEXUALABUSE #POLLACHI SEXUAL ABUSE #POLLACHI ASSAULT CASE