'பொள்ளாச்சியில் மற்றொரு கொடூரம்'...'பர்சனல் போட்டோக்களை லீக் பண்ணிடுவேன்'...பகீர் ஆடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 19, 2019 11:16 AM

அழகான இயற்கை சூழலுக்கு பெயர் போன பொள்ளாச்சி தற்போது பாலியல் அத்துமீறல் குற்றசாட்டுகளினால் கலையிழந்து நிற்கிறது.கல்லூரிப் பெண்களிடம் நட்பாக பழகி பின்பு அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கும்பலின் அக்கிரமம் சமீபத்தில் தான் வெளியே வந்தது.அந்த வீடியோகளை கண்டு தமிழகமே அதிர்ந்தது.அந்த தாக்கத்தின் வலிகளே இன்னும் குறையாத நிலையில் மற்றோரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Pollachi police arrested a bus conductor for raping and cheating girl

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், பொள்ளாச்சியை அடுத்த நாதே கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் மீது அளித்த புகார் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக வேலை பார்த்து வரும் பாலச்சந்திரன் 'தன்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும்,தன்னை விரைவில் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியாதல் நாங்கள் நெருங்கி பழகினோம்.

இந்நிலையில் இரண்டு முறை கர்ப்பமாகிய நான் அதை அவனிடம் கூற,அவன்,இப்போது இதெல்லாம் வேண்டாம் என கூறி வலுக்கட்டாயமாக கர்ப்பத்தைகலைக்க வைத்து விட்டான்.பாலச்சந்திரன் எப்படியும் என்னை திருமணம் செய்துகொள்வார் என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு போக போக தான் அவனுடைய உண்மையான முகம் தெரிய ஆரம்பித்தது.என்னை காதலிப்பதாக சொன்ன நேரத்திலேயே,அவன் நடத்துனராக வேலை செய்யும் பேருந்தில் பயணிக்கும் பல பெண்களை இதுபோன்று ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

அதோடு நாங்கள் காதலிக்கும் போது,அவனை நம்பி அனுப்பிய  அந்தரங்க மெசேஜ்கள் மற்றும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து மிரட்டுகிறான்' என தனது புகாரில் அனைவரையும் அதிர வைத்திருக்கிறார்.இதனிடையே புகார் கொடுத்த பெண்ணின் உறவினர்கள், பாலச்சந்திரன் அந்தப் பெண்ணிடம் பேசிய ஆடியோக்களையும் புகார் கொடுத்த பெண் பாலச்சந்திரனால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களிடம் பேசும் ஆடியோக்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.பாதிக்கப்பட்ட பெண்கள் கதறும் அந்த ஆடியோகள் கேட்போர் நெஞ்சை கதற வைக்கும் வகையில் உள்ளது.

'உன்னால என்னோட வாழ்க்கையே போச்சு என அந்த பெண்கள் கதறும் போது,கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்,உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ,என்ன ஒண்ணும் பண்ண முடியாது,என திமிராக பாலச்சந்திரன் பேசும் ஆடியோக்கள் பதற வைக்கிறது.மேலும் 'உன்னைவிட இன்னொருத்தி அழகா இருந்தா, அவகூட போவேன். அவளவிட இன்னொருத்தி அழகா வந்தா அவகூட போவேன்' என அந்தப் பெண்ணின் சாதியைச் சொல்லி மிகவும் தரக்குறைவாக, வக்கிரமான வார்த்தைகளால் பாலச்சந்திரன் பேசுவது,தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பினை கேள்விக் குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

முன்னதாக பாலச்சந்திரனை கைது செய்துள்ள காவல்துறையினர் அவரை சிறையில் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #SEXUALABUSE #POLLACHI SEXUAL ABUSE #BUS CONDUCTOR