‘12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து’.. துடிதுடிக்க கொலை செய்த 3 அண்ணன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Mar 19, 2019 11:02 PM
மத்தியப் பிரதேசத்தில் 12 வயது சிறுமியை அவளது 3 சகோதரர்கள் பாலியல் வன்கொடுமை செய்து தலையை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் என்னும் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தலை வெட்டப்பட்ட நிலையில் 12 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனை அடுத்து சிறுமியின் மூன்று சகோதர்களும், அவரது மாமாவும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இவர்களை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், 12 வயது சிறுமியை அவரது மூத்த அண்ணன் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்து வந்துள்ளார். பின்னர் ஒருநாள் பாண்டாவிலுள்ள தனது மாமாவின் வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கே வந்த சிறுமியின் 17 மற்றும் 19 வயதுடைய இரு சகோதரர்களும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவரது 40 வயதுடைய மாமாவும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் இதனை சிறுமி வெளியே சொல்லிவிட்டால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என அஞ்சிய அவர்கள் சிறுமியின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இந்த விவகாரம் சிறுமியின் அத்தைக்கு தெரிவந்தும், தனது கணவரை காப்பாற்ற சிறுமியை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார். இதனால் சிறுமியின் அத்தையையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
12 வயது சிறுமி சொந்த சகோதரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.