‘புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடியா?’.. ரோல் ஆன பிரேமலதா.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 29, 2019 11:16 AM

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போதே சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில், அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தற்போது தேமுதிகவுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

\'Modi did Pulwama attack?\' .. Peramalatha controversial speech

அதிமுக-பாஜக-பாமக-கூட்டணியுடன் கை கோர்த்திருக்கும் தேமுதிகவுக்கு என்று தனியான தேர்தல் அறிக்கை எதுவும் இல்லை என்றும், கூட்டணி கட்சிகளுக்கான தேர்தல் அறிக்கையினைத்தான் தாங்களும் பின்பற்றுவதாகவும் முன்னதாக பிரேமலதா கூறியிருந்தார். 

அதன் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதாக பலராலும் விமர்சிக்கப்பட்டார். எனினும் திருச்சியில் நிகழ்ந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா எம்ஜிஆர் படத்தில் வரும் ஒளிமயமான எதிர்காலம் பாடலை விஜயகாந்த் விரும்பி கேட்பார் என்று கூறினார். ஆனால் உண்மையில் அந்த பாடல் சிவாஜி பட பாடல் என பலரும் கண்டித்தனர். 

இந்த நிலையில் தற்போது பேசியுள்ள பிரேமலதா விஜயகாந்த், ‘அண்டை நாடுகளிடம் நட்பு பாராட்டி வந்த மோடி, நம் நாட்டுக்கு ஒரு அச்சுறுத்தல் வந்ததும் புல்வாமா தாக்குதலை நடத்தி தைரியம் மிக்க ஒரு பிரதமராக இந்த உலகத்துக்கு நிலைநாட்டியவர் நமது பாரத பிரதமர் மோடி’ என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேச்சும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

Tags : #NARENDRAMODI #PULWAMAATTACK #VIJAYAKANTH #PREMALATHA #DMDK