'பொள்ளாச்சி கொடூரம்'...வழக்கை 'சிபிசிஐடிக்கு' மாற்றிய டிஜிபி...விசாரணை அதிகாரி யார்?

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 12, 2019 02:24 PM

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Pollachi Sexual Abuse has been transferred to CBCID

முகநூல் மூலம் நட்பாக பழகி,ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததாக, பெண் ஒருவர் அளித்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை ஜாமீனில் விடவேண்டி அவனது தாய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கினை சிபிசிஐடியின் பெண் எஸ்பி ஒருவர் விசாரிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் விரைவில் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

Tags : #SEXUALABUSE #RAPE #POLLACHI ASSAULT CASE #POLLACHI SEXUAL ABUSE