'பொள்ளாச்சி பாலியல் கொடூரம்'...'களத்தில் இறங்கும் சிபிஐ'...மேலும் உண்மைகள் வெளிவருமா?

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 14, 2019 12:27 PM

தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.இதனால் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pollachi Sexual Abuse case transferred to CBI.Go has been Released

பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் கொடூரங்கள் தொடர்பாக இளம் பெண் ஒருவர் அளித்த புகாருக்கு பின்பு இந்த விவகாரம் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கும் இந்த விவகாரத்தில், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யும் வீடியோகள் இருந்தது கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே  அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணையை சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் தொடங்கினர்.இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடியில் இருந்து, சிபிஐக்கு மாற்றும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.முன்னதாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #SEXUALABUSE #POLLACHI SEXUAL ABUSE