'சம்பள பிரச்சனை அதுனால''ஆபாச வீடியோ'' அனுப்பினோம்'...பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 12, 2019 03:29 PM

பெண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி தொந்தரவு செய்த 3 பேரை காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

3 persons caught by police for sending porn videos to women

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.இவர் பெயின்டிங் வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார்.இவரிடம் பக்கத்து ஊரை சேர்ந்த ஆனந்தகுமார், ரவிராகுல், சரண்ராஜ் ஆகிய மூவரும் வேலை செய்து வந்தனர்.இதனிடையே சம்பளம் கொடுப்பதில் விஜயகுமாருக்கும்,இவர்கள் மூவருக்கும் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருந்தன.இதனால் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட மூவரும் விஜயகுமாரிடம் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில் ஆனந்தகுமார், ரவிராகுல், சரண்ராஜ் ஆகிய மூவரும் வேறு ஒருவரிடம் வேலைக்கு செல்ல தொடங்கினர்.இருப்பினும் விஜயகுமார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.இதனிடையே சில தினங்களுக்கு முன்பு இந்த மூவரும் சேர்ந்து, விஜயகுமாரின் மனைவிக்கு ஆபாச வீடியோகளை அனுப்பி உள்ளனர்.மேலும் தொடர்ந்து விஜயகுமாரின் மனைவிக்கு வாட்ஸ் ஆப்யில் ஆபாச வீடியோகள் மற்றும் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

இதனையடுத்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வாழவந்தி நாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார், ரவிராகுல், சரண்ராஜ் ஆகிய 3 பேரையும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சம்பள பிரச்சனையில் கான்ட்ராக்டரின் மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #WHATSAPP #NAMAKKAL