‘கை, கால்கள் கட்டப்பட்டு, பரிதாப நிலையில் 5 வயது சிறுமியின் சடலம்’.. பதற வைக்கும் கொடூர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 26, 2019 03:09 PM

கை, கால் கட்டப்பட்ட நிலையில் 1 -ம் வகுப்பு சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 year old girl who was missing in coimbatore found dead

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்புதூர் என்ற ஊரில் கனபிதீப்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் துப்பரவுப் பணியாளார்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியனருக்கு 5 வயதில் மற்றும் 7 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் நேற்று வழக்கம் போல பள்ளி சென்று திரும்பி, பின்னர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென 5 வயது சிறுமி காணமால் போயுள்ளார். இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து தடாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று(26.03.2019) காலை கஸ்தூரிநாயக்கன்புதூரில் ஒரு பள்ளத்தில் காணாமல் போன குழந்தை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், முகத்தில் டி-சர்ட்டால் சுற்றப்பற்று சடலமாக கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் குழந்தையின் உடல் முழுவதும் காயங்களாக இருந்ததால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? போன்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COIMBATORE #CHILD #KILLED #BIZARRE