சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்.. கேபிள் ஆபரேட்டரை சரமாரியாக தாக்கிய குடியிருப்பு வாசிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 17, 2019 01:01 PM

தொடர்ந்து பாலியல் குற்றங்கள், சிறுமிகள் வன்கொடுமை என முடிவில்லாமல் செல்லும் கொடுஞ்செயல்களின் வரிசையில் புதுக்கோட்டையில் மற்றுமொரு பதறவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TN - youth arrested under pocso act for abusing child goes bizarre

இலுப்பூரைச் சேர்ந்த ரங்கசாமியின் மகன் 22 வயதான ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில் வசித்து வரும் ரகுபதி புதுக்கோட்டையில் கேபிள் டிவி பழுதுபார்க்கும் தொழிலைச் செய்து வந்தார்.

அப்படி ஒருமுறை தொழில் நிமித்தமாக புதுக்கோட்டையில் இருக்கும் திலகர் திடல் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு குழந்தைகளிடம் ஏதேதோச் சொல்லி, அந்த குடியிருப்பின் மாடிப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்ட ரகுபதி குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அந்த சமயம் அங்குவந்த குடியிருப்புவாசிகள் ரகுபதியின் கொடுஞ்செயலைப் பார்த்ததும் பதறிப் போய் ஓடிச்சென்று குழந்தைகளை மீட்டுள்ளனர். பின்னர் ரகுபதியை சரமாரியாக அடித்து நகர காவல் நிலையம் புதுக்கோட்டையில் ஒப்படைத்தனர்.

அங்கு தீவிரமாக விசாரிக்கப்பட்ட ரகுபதி பின்னர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதோடு, அவர் செய்த தவறுக்காக நீதிபது முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : #SEXUALABUSE #CHILDABUSE #POCSO