‘10 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’.. ‘வீடியோவை வெளியிட்ட ஆட்டோ டிரைவர்’.. கண்ணீருடன் மாணவி கதறல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 19, 2019 04:01 PM

10 ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

10th std girl is sexually abused by an auto driver in Kanyakumari

பொள்ளாச்சியில் 200 -க்கும்  மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தக்குமார், சபரிநாதன் என்ற நால்வரை பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து போலிஸார் கைது செய்தனர். இதனை அடுத்து இவர்கள் நால்வர் மீது குண்டர் சட்டம் சுமத்தப்பட்டு, சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மயிலோடு பகுதியைச் சேர்ந்த 10 ம் வகுப்பு படிக்கும் மாணவி பொதுத் தேர்வுக்காக ஹால்டிக்கெட் வாங்க, கடந்த திங்கள் கிழமை ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், பள்ளிக்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் மாணவி பள்ளிக்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அன்று மாலை மாணவி அழுதபடியே வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோர் விசாரித்தலில் ஆட்டோ டிரைவர் சரவணன் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். மேலும் மாணவியின் ஆபாச படத்தை சரவணன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக போலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரளாவில் தலைமறைவாகியிருந்த சரவணனை தக்கலை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தின் பரபரப்பு அடங்காத நிலையில் கன்னியாகுமரியில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KANYAKUMARI #SEXUALABUSE #STUDENT #ABUSED #AUTO DRIVER