‘ஒரு பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பாவா?’.. ஆத்திரமடைந்த கணவர்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Mar 28, 2019 04:13 PM

இரட்டைக் குழந்தைகள் பொதுவாக ஆண், பெண் என வெவ்வேறு பாலினங்களான ஒற்றை தம்பதியினருக்கு பிறப்பது வழக்கம். ஆனால் சீனாவில் பெண் ஒருவருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு அப்பாக்கள் இருப்பதாக கணவரும், மருத்துவமனையும் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் விநோதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chinese mother gives birth to twins with different DNA goes bizarre

ஒத்த கருமுட்டையில் இருந்து இரண்டு சிசுக்கள் உருவாவதே ஐடிடெண்ட்டிக்கள் ட்வின்ஸ் எனப்படும் ஒற்றை உருவம் படைத்த இரட்டையர்கள். உலகம் முழுவதுமே இப்படியான இரட்டையர்கள் இருப்பதுண்டு. தவிர மரபணு ரீதியாக சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் குழந்தைகள் ஏறத்தாழ ஒத்த உருவமைப்பைக் கொண்டு விளங்குவது இயல்பான ஒன்று.

ஆனால் சீனாவின் ஸியாமி நகரில் பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்கள்தான் என்றாலும், அந்த பெண்ணின் கணவருக்கு, இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை தன் ஜாடையிலும், மனைவி ஜாடையிலும் இல்லாதிருந்தது சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது.

இதனை அடுத்து டிஎன்ஏ பரிசோதனை எடுத்துப் பார்த்ததில் இரண்டு குழந்தைகளின் டி.என்.ஏவில் ஒன்று மட்டுமே தந்தையுடன் பொருந்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்களும், ஒத்த கருமுட்டையில் தோன்றும் இரட்டையர்களுக்கு ஒரே டிஎன்ஏ தான் இருக்க முடியும் என்றும் அவையும் தந்தையுடன் பொருந்தும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

இதனால் தன் மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாக எண்ணிய கணவர் தனது ஜாடையில் இருந்த ஒரு குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். சீனாவில் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த நிகழ்வு குழந்தைகளின் தாய் செய்த தவறுதான் காரணமா அல்லது உண்மையில் மருத்துவ ரீதியலான அதிசயம்தான் காரணமா என்பது புரியாமல் மருத்துவர்கள் குழம்பித் தவித்துக்கொண்டு வருகின்றனர்.

Tags : #CHINA #NEWBORN #BABIES #MOTHER #TWINS #IDENTICALTWINS #BIZARRE