“மகளின் காதலுக்காக”.. இப்படி ஒரு ரிஸ்க் எடுத்த அம்மா.. பதறவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 25, 2019 04:19 PM

மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடிப்பதற்காக, ஒரு தாய் எந்த எல்லைக்கும் சென்று ரிஸ்க் எடுப்பதை எளிதாகக் காணலாம்.  ஆனால் மகளின் காதலுக்காக ஒரு தாய் இப்படி ரிஸ்க் எடுப்பாரா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் திருவொற்றியூரில் விநோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Mother kidnaps youngster who cheated her daughter in the name of love

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது, செய்யூர் தாலுகாவுக்குட்பட்ட கண்ணமங்கலம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த  27 வயதான கிருஷ்ணராஜ் என்பவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருபவர். இதே கம்பெனியில் தன்னுடன் பணிபுரிபவரான திருவொற்றியூர், காந்தி தெருவைச் சேர்ந்த  23 வயதான திவ்யா என்பவரிடம் கிருஷ்ணராஜ் நட்பாக பழகியுள்ளார்.

திவ்யாவின் தரப்பிலோ, அது காதல் என்று கூறப்பட்டதோடு, கிருஷ்ணராஜ் தன்னை காதலித்துவிட்டு, ஆனால் திருமணம் செய்ய மறுப்பதாக திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். ஏமார்ந்து போனதால் திவ்யா தனது உறவினர்களிடம் தன் காதல் விவகாரத்தை உடைத்துக் கூறியுள்ளார். 

திவ்யாவுக்கு ஆறுதல் கூறிய திவ்யாவின் அம்மா உள்ளிட்ட உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி திவ்யா கிருஷ்ணராஜூக்கு போன் செய்து, ‘உங்கள உடனே பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசணும்’ என்று கூறியுள்ளார். சுதாரித்த கிருஷ்ணராஜ் தனது வழக்கறிஞருடன் திவ்யா சொன்ன வடிவுமையம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு வழக்கறிஞரை விட்டுவிட்டு கிருஷ்ணராஜ் மட்டும் கடத்தப்பட்டார்.

பின்னர் கிருஷ்ணராஜின் வழக்கறிஞர் கொடுத்த தகவலின் பேரிலும் கிருஷ்ணராஜின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரிலும் திருவொற்றியூர் காவல்துறையினர் விசாரித்து கிருஷ்ணராஜை மீட்டுள்ளனர். விசாரணையில் கிருஷ்ணராஜை கடத்தியது திவ்யாவின் அம்மா கவிதா, உறவினர்கள் முருகேசன் சங்கர் குமார், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர்தான் என தெரிய வந்தது.

ஆனால் திவ்யாவின் தரப்பில் கிருஷ்ணராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தவே அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், இந்த கடத்தல் திட்டத்துக்கான ஆதாரங்கள் இருந்ததால் போலீஸார் திவ்யாவின் அம்மா மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #KIDNAP #LOVE #BIZARRE