‘சாலையைக் கடக்க முயற்சித்த பெண்’.. வந்த வேகத்தில் அடித்து தூக்கி வீசப்பட்டு விபத்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 24, 2019 11:34 AM

எங்கேயும் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருப்பது; கவனமின்மையாலும், அவசரத்தாலும், அகந்தையினாலும் தான் செய்யும் தவறினால் அடுத்தவர்களையும் நம்மையும் சேர்த்து பாதிப்புக்குள்ளாவது; லட்சியக் கனவுகளை, கனவுச் சிறகுகளை நொடிப்பொழுது அவசரத்தினாலும் நிதானமின்மையினாலும் தட்டென பறிகொடுக்க வேண்டிய நிலை வரை எல்லா விளைவுகளையும் உண்டாக்கும் இந்த விபத்தில் இந்தியா முதன்மையான இடங்களில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

bizarre TN accident happened in kanyakumari CCTV goes viral

வளைவுகளில் முந்துவதால், மோசமான விளைவுகளை உண்டாக்கிக் கொள்கிறோம்; எண்ணத்தை வேறெங்கோ வைத்துக்கொண்டு என்னத்துக்காக வாகனத்தை ஓட்டவேண்டும். மது அருந்திவிட்டு ஓட்டுவதால் மூப்புக்கு முன்னரே இழப்புண்டாகிறது. இவை எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் விழிப்புணர்வாக அரசு மற்றும் தனியார் நல அமைப்புகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் தனிமனித கட்டுப்பாட்டையும் மீறிய விபத்துக்களும் நிகழ்வதுண்டு.

கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோவில் அருகே, ஸ்கூட்டியில் வந்து சாலையைக் கடக்க முயற்சித்துள்ளார் பெண் ஒருவர். அவர் சாலையைக் கடக்கும்போது, அந்த சாலை மார்க்கமாக வெகுவேகமாக பறந்துவந்த பைக்கால் இடித்துத் தூக்கி வீசப்பட்டுள்ளார். பதைக்க வைத்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

நாகர்கோவிலின் மேலமணக்குடியை சேர்ந்த மேரி ஜெனிபர் என்பவர்தான் அந்த பெண்.  அவர் பருத்திவிளை சாலைமுனையில் ஸ்கூட்டியுடன் வந்து சாலையைக் கடந்துள்ளார். பாதி தூரம் சாலையில் குறுக்குவாட்டில் சென்று வண்டியைத் திருப்புவதற்குள், வெகுவேகமாக பைக்கில் வந்த டென்னில் எனும் இளைஞர் மோதியதால், ஜெனிபர் அடித்து தூக்கப்பட்டார். தற்போது ஜெனிபர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து டென்னிலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #ACCIDENT #KANYAKUMARI #BIZARRE