‘அதிபரின் கழுத்தை மறைத்ததால்’.. அதிரடியாக டிஸ்மிஸ்.. போட்டோகிராபருக்கு வந்த சோதனை!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Mar 28, 2019 11:24 AM
சில பணிகள் மிகவும் சிரமமானவைதான். அந்த குறிப்பிட்ட சில பணிகளை என்னதான் நெளிவு சுளிவோடு செய்தாலும் வருகிற ஆப்பு வந்தே தீரும். கத்திமேல் நடப்பது போன்ற அந்த பணிகளுள் முக்கியமான பணி பத்திரிகை போட்டோகிராபி.
வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-யூன் சமீபத்தில் நிகழ்ந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு செய்துவிட்டு, அங்கு கூடியிருந்த மக்களின் ஆரவாரத்துக்கு இணங்க, தன் கையசைத்து அனைவரிடமும் புன்னகைத்துள்ளார். அப்போது கிம்-ஜாங்-யூனின் கட்சியைச் சேர்ந்த வழக்கமான போட்டோகிராபரான ரி என்பவர் கிம்மின் முன்னாள் வந்து நின்று, கிம்மை தெளிவாகவும், துல்லியமாகவும், குளோஸ் -அப்பிலும் படம் பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவ்வாறு சரியான கோணம் கிடைப்பதற்காக அவர் கேமராவை சற்றே உயர்த்திப் பிடித்ததால், கேமராவின் பிளாஷ் பிளேட் பகுதியானது கிம்-ஜாங்-யூனின் கழுத்து பகுதியை மறைத்ததால், பார்வையாளர்களுக்கு அவர் சரியாக தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தனக்கு முன்னாள் வந்து, தான் நிற்கும் இடத்தை நெருங்கி வந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பதை கிம்-ஜாங்-யூன் விரும்பாதவர் என்பது பலரும் அறிந்த விஷயம்.
இந்த நிலையில், கிம்மின் முகத்தை கேமரா எடுப்பதன் பேரில் 3 விநாடிகளுக்கு அவரது கழுத்தை மறைத்த போட்டோகிராபரை அந்த கட்சியின் புகைப்படக் காரர் பொறுப்பிலிருந்து பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த போட்டோகிராபர், நாட்டின் இரண்டாம் தர குடிமகனின் அந்தஸ்துக்கு மதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த போட்டோகிராபர்தான் கடந்த மாதம் ஹனோயில் ட்ரம்புக்கும் கிம்-ஜாங்-யூனுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பை புகைப்படம் எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.