‘மனைவியின் அன்பு மீது சந்தேகம்’..‘நடு ரோட்டில் கணவனின் கொடூர டெஸ்ட்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 16, 2019 09:42 PM

மனைவி தன் மீது வைத்திருக்கும் காதலில் ஆழத்தை சோதிக்க குடிபோதையில் நடுரோட்டில் நின்ற கணவனை வேன் மோதி தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Husband tests his wife’s love by standing in middle of road

சீனாவைச் சேர்ந்த பான் அவரது மனைவி சவ். தன் மீது தனது மனைவி வைத்துள்ள அன்பு எந்த அளவுக்கு உண்மையானது என அறிந்து கொள்ள ஒரு விபரீத முடிவை பான் எடுத்துள்ளார்.

குடிபோதையில் இருந்த பான் நடு ரோட்டில் நின்றால் தன்னை காப்பாற்ற தனது மனைவி வருகிறாளா என சோதனை செய்துள்ளார். இவரின் விநோத செயலைக் கண்ட அவரது மனைவி பானை சாலையில் ஓரமாக இழுத்துக்கொண்டு வருகிறார்.

ஆனால் பான் மீண்டும் சாலையில் நடுவே நிற்பதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்துள்ளார். பானின் மனைவியும் பலமுறை சாலையோரமாக இழுத்து வந்து காப்பாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாமல் பானின் மனைவி அவரை நடுரோட்டில் விட்டுள்ளார்.

அப்போது வேகமாக இரு வாகனங்கள் பானின் அருகே மோதுவது போல வந்து ஓரமாக சென்றுள்ளது. ஆனாலும் வேகமாக வந்த மற்றொரு வேன் பானின் மீது மோத, அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் சாலையில் ஓரமாக இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags : #CHINA #CCTV #BIZARRE #VIRALVIDEO