3 மணிநேர சித்ரவதை.. கை, கால் நரம்பை அறுத்து வீடியோ எடுத்து ரசித்த கும்பல்.. பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 18, 2019 10:39 PM

கேரளாவில் இளைஞர் ஒருவர் கை, கால்களின் நரம்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala youth Ananthu was tortured, abducted in broad daylight

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கொஞ்சிரவிலா என்கிற பகுதியைச் சேர்ந்த கிரிஷ் என்ற ஆட்டோ ஓட்டுநரின் மகனான அனந்து கிரிஷ்(21) கடந்த வாரம் செவ்வாய் கிழமை(12.03.2019) திடீரென காணமால் போயுள்ளார். இதனை அடுத்து சிறிது நேரத்தில் அனந்து கடத்தப்பட்டதாக அவரின் நண்பர்கள் அனந்துவின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதன்கிழமை(13.03.2019) கரமானா என்னும் இடத்தில் அனந்து கொடூரமான முறையில் இறந்து கிடந்துள்ளார். உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பல திடுக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அனந்து இறப்பதற்கு சுமார் 3 மணிநேரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதில் அவரின் கை, கால் பகுதியில் உள்ள சதை மற்றும் நரம்புகளை வெட்டி எடுத்துள்ளனர். அனந்துவின் உயிர் போகும் வரை அந்த இடத்தில் இருந்து அந்த கும்பல் வீடியோ எடுத்து ரசித்துள்ளது.

இதனை அடுத்து இந்த கொலை தொடர்பாக விஷ்ணு ராஜ், வினீஷ் ராஜ் மற்றும் விஜய ராஜ் ஆகிய மூவர் உட்பட 8 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் கும்பலுக்கும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களின் மீது அடிதடி, கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

14 பேர் கொண்ட இந்த கும்பலில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீது 7 பேரை போலிஸார் தேடிவருகின்றனர். இந்த கொலை முன்பகை காரணமாக நடந்திருப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KERALA #YOUTH #KILLED #BIZARRE