ரூ. 58 ஆயிரம் கடனுக்காக.. 4 வயது குழந்தையை கொலை செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 18, 2019 04:06 PM

கன்னியாகுமரியில் வாங்கிய கடனைத் திருப்பி தர தாமதமானதால் 4 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 year old child killed for loan issue in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கெபின்ராஜ். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் ரெய்னா என்கிற மகன் இருந்துள்ளான். சரண்யா அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவரிடம் ரூ. 58 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

கடனை திரும்பச் செலுத்துவதில் சரண்யாவுக்கும், அந்தோணிசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே கடனைச் செலுத்துவது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சரண்யாவின் மகனை அந்தோணிசாமி பைக்கில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கெபின்ராஜ்-சரண்யா தம்பதியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்து குழந்தையை தேடிவந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று முகிலன் குடியிருப்பு பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் ரெய்னா சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவலிறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்தோணிசாமியை கைது செய்த போலீஸார், அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KANYAKUMARI #CHILD #KILLED #LOAN #BIZARRE