தன் கள்ளக்காதலை அறிந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் மகள்.. தாய் கொடுத்த கொடூர தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 22, 2019 01:26 PM

உதகமண்டலத்தில் பெற்ற மகளையே கழுத்தை நெறித்துக் கொன்றுள்ள தாயின் வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

daughter gets killed by mom after she finding her mother\'s affair

உதகை அருகில் உள்ளது கோடப்பமந்து என்கிற பகுதி. இங்கு ராஜலட்சுமி-ஜகன் தம்பதியர், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். ஜகன் ராஜலட்சுமியை பிரிந்த பின்னர், ராஜலட்சுமி தன் கணவர் இல்லாத தனிமைக்கு மாற்றாக வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளார்.

ஆனால் ராஜலட்சுமி-ஜகன் தம்பதியருக்கு 5-ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 12 வயது மதிக்கத்தக்க உஷாராணி எனும் ஒரு மகள் இருந்துள்ளார். தாய் ராஜலட்சுமியுடன் வளர்ந்து வந்த இவருக்கு தெரியாமல்தான் ராஜலட்சுமி தன்னுடைய ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக ராஜலட்சுமி, அந்த நபருடன் இருந்ததை, ராஜலட்சுமியின் மகள் உஷாராணி பார்த்துவிட்டார்.

தாயின் நடத்தையால் அதிருப்தி அடைந்த உஷாராணி, நடந்த விவகாரத்தை தன் பாட்டியிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த ராஜலட்சுமி தனது காதல் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததோடு, தன் விவகாரத்தை பற்றி பாட்டியிடம் சொல்லியதால், பெற்ற மகளின் மீது ஆத்திரமடைந்துள்ளார். அதன் பின்னர் ஒரு வழியாக யோசித்து, தனது மகளை சிறுமி என பார்க்காமல் கொன்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது மகள் ஊஞ்சலாடும்போது, ஊஞ்சல் சேலை அவளது கழுத்தை இறுக்கிவிட்டதென்றும், அதனால் அவள் உயிரிழந்துவிட்டாள் என்றும் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் ராஜலட்சுமி கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.  எனினும் ராஜலட்சுமியின் ஆண் நண்பர் தலைமறைவானதால் அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Tags : #CRIME #MOTHER #DAUGHTER