‘யாரு சாமி இவன்’.. ‘எடுத்த பணத்தை திரும்பக் கொடுத்த அதிசய திருடன்’.. இப்படி ஒரு காரணமா?.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 15, 2019 11:52 AM

சீனாவில் ஏடிஎம் -ல் இருந்து பணம் எடுத்த பெண்ணிடமிருந்து, திருடிய பணத்தை மீண்டும் திருப்பிக் கொடுத்த திருடனின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thief returns money to woman after seeing her bank account was empty

சீனாவில் ஹேயூஹான் நகரில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த மாதம் 16 -ம் தேதி லீ என்ற பெண் பணம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது கத்தியுடன் நுழையும் திருடன் லீயை மிரட்டி பணத்தை பறித்துள்ளார். மேலும் அப்பெண்ணிடம் மீண்டும் ஏடிஎம் -ல் இருந்து பணத்தை எடுத்து தர சொல்லி மிரட்டியுள்ளார்.

உடனே லீ தனது வங்கி இருப்புத்தொகையை ஏடிஎம் இயந்திரத்தில் காண்பித்துள்ளார். அதில் லீயின் வங்கி இருப்புத்தொகை ஜீரோ என காண்பித்துள்ளது. இதனால் மனம் மாறிய அந்த திருடன் லீயிடம் பறித்த பணத்தை சிரித்துக்கொண்டே திரும்பக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த செய்தியை குறித்து ‘இவர் நல்ல திருடன்’ எனவும், ‘இரக்க குணம் கொண்ட திருடன்’ எனவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : #CHINA #ATM #ROBBERY #THEFT #VIRALVIDEOS