’இந்த ருசியான விருந்துக்கு நன்றி பாய்’: பிரபல வீரரின் வைரலாகும் டின்னர் ட்ரீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Mar 28, 2019 02:18 PM

தனது கல்யாண நாளில் தன்னுடைய அணி வீரர்களுக்கு சுவையான விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல் ரவுண்டரான யூசப் பதான். 

yusuf pathan shares wedding anniversary celebration photos

யூசப் பதான் நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். யூசுப் பதானுக்கும் -  அஃப்ரீன் கானுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்கள் தங்களது 6-வது திருமண நாளை கொண்டாடினர். இதனையொட்டி 'என் காதலுக்கு வாழ்த்துகள்' என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் யூசப். இதனை பார்த்த கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

தனது திருமண நாளை முன்னிட்டு அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு யூசப் மிகப்பெரிய விருந்து  ஒன்றினை அளித்துள்ளார். விருந்தில் கலந்துகொண்டு ருசியான உணவினை வெளுத்து வாங்கும் வீரர்கள், அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். கூடவே யூசப் பதானுக்கு, வீரர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். சன்ரைசர்ஸ் அணி வீரரான சந்தீப் ஷர்மா, 'இனிய திருமண நாள் வாழ்த்துகள் யூசப் பாய். இந்த அருமையான விருந்திற்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் சன் ரைசர்ஸ் அணி வீரர் ரஷீத் கான், 'இந்த ருசியான விருந்து அளித்ததற்கு நன்றி யூசப் பாய், உங்களுக்கு எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் அணி, வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தனது சொந்த ஊரில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக அட்டகாசமான விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் யூசப்.

Tags : #IPL #IPL2019 #YUSUFPATHAN