‘ஐசியு-வில் இருந்த பெண்.. கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவர்கள், ஊழியர்கள்.. பெண் உட்பட 5 பேர் கைது!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 25, 2019 05:49 PM

உத்தரப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்துள்ள கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியாவையே அதிரவைத்துள்ளது.

doctors, medical staff arrested for gang raping a woman in ICU

உத்தரப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவின் கீழ், ஐசியு- வார்டில் மூச்சுத் திணறல் காரணமாக பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மூச்சுத் திணறல் காரனமாக அங்கேயே தங்கி, சிகிச்சை எடுக்க வேண்டி, மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் முழுமையான படுக்கை வசதியுடன் கூடிய அறையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

30 வயது மதிக்கத்தக்க இந்த பெண்ணின், கல்லீரலிலில் உண்டான சிக்கலும், சுவாசக் கோளாறும் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர், உறவினர்கள் வெளியில் சென்றுவிட்ட நிலையில்,  அந்த  தனியார் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என 3 பேர், அந்த பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு, பின்னர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கு ஒரு பெண்ணும், இன்னொருவரும் உடந்தையாக இருந்துள்ளது இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் ஒரு பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும், அதற்கு பெண் ஊழியரே உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 5 பேரும், உரிய சட்டத்தின் கீழ், உத்தர பிரதேச காவல் துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் இந்த மருத்துவ ஊழியர்கள், பலாத்காரத்திற்கான திட்டத்தை வகுப்பதற்கு முன்னர் சிசிடிவி கேமராவின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதும் தெரியவந்தது. போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #BIZARRE #UTTARPRADESH #RAPE #HOSPITAL #DOCTORS