‘9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்று ஆச்சரியப்படுத்திய பெண்’.. 4.7 பில்லியன் பிரசவத்தில் ஒருமுறை நடக்கும் அதிசயம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Mar 18, 2019 11:25 PM
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரில் வசிக்கும் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவத்துக்காக டெக்சாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. அதுவும் வெறும் 9 நிமிடங்களில் பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அதிகாலை 4.50 முதல் 4.59 மணிக்குள் 6 குழந்தைகளை சியாகா பெற்றுள்ளார். அதில் நான்கு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் சியாகாவுக்கு பிறந்துள்ளது.
மேலும் தாயும் குழந்தைகளும் நலமுடம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் உடல் எடை குறைவாக இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கவனிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள், அதுவும் 9 நிமிடத்தில் என்பது 4.7 பில்லியன் பிரசவத்தில் ஒருமுறை நிகழும் அதிசயம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
