‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Sep 28, 2019 05:02 PM
சச்சின் டெண்டுல்கர் நீர் தேங்கிய இடத்தில் வெறித்தனமாக வலைப்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

சர்வதேச போட்டிகளில் அதிக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வீரர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் #FlashbackFriday என்ற ஹேஷ்டேகுடன் அவர் தண்ணீர் தேங்கிய இடத்தில் வலைப்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் குறைந்த இடைவெளியில் வீசப்பட்டு பவுன்சர்களாக வரும் பந்துகளை சச்சின் லாவகமாக எதிர்கொள்கிறார். இந்த பயிற்சி வெளிநாடுகளில் போட்டியின்போது பேட்ஸ்மென்களை அச்சுறுத்தும் பவுன்சர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் அந்தப் பதிவில் அவர், “கிரிக்கெட் மீதுள்ள ஆர்வமும், காதலும் புதுப்புது முறைகளில் பயிற்சி மேற்கொள்ள தூண்டும். நாம் என்ன செய்கிறோமோ அதை விரும்பி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார். தண்ணீர் தேங்கிய இடத்தில் சச்சின் வலைப்பயிற்சி செய்யும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
Love and passion for the game always helps you find new ways to practice, and above all to enjoy what you do.#FlashbackFriday pic.twitter.com/7UHH13fe0Q
— Sachin Tendulkar (@sachin_rt) September 27, 2019
