asuran US others

நடுவழியில் தண்டவாளத்தைவிட்டு விலகி விழுந்த ‘ரோலர்கோஸ்டர்’.. 2 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Sep 29, 2019 05:48 PM

மெக்சிக்கோவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

WATCH: Mexico roller coaster crash leaves two dead

மெக்சிக்கோவில் லா ஃபெரியா என்னும் பொழுதுபோக்கு அமைந்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிமாக இருந்துள்ளது. அப்போது பயணிகள் சிலர் ரோலர் கோஸ்டரில் பயணித்துள்ளனர். சீராக சென்றுகொண்டிருந்த ரோலர் கோஸ்டரின் ஒரு பகுதி திடீரென தண்டவாளத்தில் இருந்து விலகியுள்ளது. இதனால் அதில் பயணம் செய்வதர்கள் கீழே தவறி விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 2 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெண்கள் உட்பட 5 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து பொழுது போக்கு பூங்காவில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றபட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MEXICO #ROLLERCOASTER #CRASH #THEMEPARK #DEAD #CHAPULTEPEC ACCIDENTE