‘பல லட்சம் மதிப்புள்ள பைக்’.. சும்மா மின்னல் வேகத்தில் பறந்த ‘தல’ தோனி..! வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 27, 2019 07:23 PM

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி விலையுயர்ந்த பைக்கில் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni rides his Kawasaki Ninja H2 bike video goes viral

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவதால் தமிழகத்தில் அதிகமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். தோனி கிரிக்கெட் மட்டுமின்றி கார், பைக்குகள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில் விலையுயர்ந்த கவஸாகி நின்ஜா எச்2 பைக்கில் தோனி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 2016 -ம் ஆண்டு தோனி இந்த பைக்கை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது இந்த வகை மாடல் பைக்கின் விலை ரூ.29 லட்சம் (எக்ஸ்-ஷோரும், இந்தியா) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு விலையுயர்ந்த ஜீப் கிராண்டு செரோகி டிராக்ஹாக் என்ற காரை தோனி ஓட்டி வந்த வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Tags : #MSDHONI #VIRALVIDEO #SUPERBIKE #KAWASAKININJAH2