‘7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள்’.. ‘முதல் போட்டியிலேயே’.. ‘தெறிக்கவிட்ட குட்டி மலிங்கா’..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 27, 2019 04:28 PM

இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் இளம்வீரர் ஒருவர் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

6 for 7 Sri Lankas 17 yo Matheesha bowls like Malinga Viral Video

சர்வதேச போட்டிகளில் மற்ற வீரர்களைப் போல இல்லாமல் தனி ஸ்டைலில் பந்து வீசி அசத்துபவர் லசித் மலிங்கா. இவருடைய பந்துவீச்சு ஓடிவந்து எறிவது போல இருந்தாலும் துல்லியமான யாக்கராக இருக்கும். அதேசமயம் சரியான நேரத்தில் மெதுவாக பந்துவீசி விக்கெட் எடுத்து அசத்துவதிலும் வல்லவரான இவர் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்கள் பலரின் ரோல் மாடலும் கூட.

தற்போது மலிங்கா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று டி20 போட்டிகளில் மட்டும் இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் மலிங்கா போலவே பந்து வீசிய மத்தீஷா பதிரானா (17) என்ற இளம் வீரர் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

டிரினிட்டி கல்லூரிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே மத்தீஷா தனது பந்துவீச்சால் பேட்ஸ்மென்களை திணறடித்து அடுத்தடுத்து அவுட் செய்துள்ளார். பார்ப்பதற்கு மலிங்கா போலவே மத்தீஷா பந்து வீசும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Tags : #SRILANKA #LASITHMALINGA #MATHEESHAPATHIRANA #VIRALVIDEO #7RUNS #6WICKETS #BOWLING #CLONE