'ஸ்பெஷல் சக்தி இருக்கு'... 'அதுக்கு ஒரு தலை மட்டும் இல்ல'...'கோவிலுக்கு பக்கத்தில் கிடந்த 'பாம்பு தோல்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Oct 10, 2019 03:54 PM
கோவிலுக்கு பக்கத்தில் கிடந்த பாம்பு தோல் ஏழு தலையுடைய பாம்புடையது என மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கனகாபுராவில் மரிகவுடனா டோடி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கோவில் ஒன்றில் அதன் பணியாளர் கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோயில் வளாகத்திலிருந்து 10 அடி தூரத்தில் பாம்பின் தோல் ஒன்று கிடந்துள்ளது. இதை ஏழு தலை பாம்பின் தோல் என நம்பிய மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து கண்டு செல்கிறார்கள். ஏழுதலையுடைய ‘புராண’ பாம்பு உண்மையில் இருக்கும் என்பதே அந்த கிராமவாசிகளின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய கிராமவாசி ஒருவர் '' சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போன்ற பாம்பின் தோல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இந்த இடத்திற்கு ஏதோ சக்தி இருப்பதாக கிராம மக்கள் உணர்ந்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கோவிலை கட்டிய கிராம மக்கள் வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்'' என கூறினார்.
இதனிடையே பாம்பு பிடி நிபுணர்கள் அத்தகைய ஏழுதலை பாம்பு என்று ஒன்று கிடையது என மறுத்துள்ளார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ''மனிதர்களிடையே இணைந்த இரட்டையர்களைப் போலவே, சில பாம்புகளுக்கும் இரண்டு தலைகள் இருக்கும். ஆனால் உலகில் எங்கும் ஏழு தலை பாம்பு இருப்பதற்கான எந்த பதிவும் இல்லை என அவர்கள் கூறியுள்ளார்கள்''.
