‘தன்னைத் தானே அவமானப்படுத்திக்க’.. ‘புதுசு புதுசா யோசிக்கறாரு’.. ‘கலாய்த்து சேவாக் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 03, 2019 09:51 PM

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விமர்சிக்கும் விதமாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள சேவாக் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Imran Khan Inventing New Ways To Humiliate Himself Says Sehwag

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில்  ஐநாவில் உரையாற்றியபோது தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசியதற்காகவும், காஷ்மீரில் விரைவில் புல்வாமா போல மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனக் கூறியதற்காகவும் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அதையடுத்து அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் அமெரிக்காவின் உள்கட்டமைப்பை கிண்டல் செய்யும் விதமாகப் பேசியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர், “நீங்கள் சீனாவிற்கு சென்று அங்குள்ள உள்கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நியூயார்க் நகரில் நான் பார்க்கிறேன் கார்கள் குதித்து குதித்துச் செல்கின்றன” எனக் கூறியுள்ளார். அதற்கு உடனடியாக அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “நீங்கள் பாகிஸ்தான் பிரதமர் போல் பேசவில்லை. பிராங்க்சிலிருந்து வரும் வெல்டர் போல் பேசுகிறீர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சேவாக் அதில், “நீங்கள் பிராங்க்சைச் சேர்ந்த வெல்டர் போல பேசுகிறீர்கள் என தொகுப்பாளர் கூறுகிறார். சில நாட்களுக்கு முன் ஐநாவில் ஆற்றிய உரைக்குப் பின்னர் இவர் (இம்ரான் கான்) தன்னைத் தானே அவமானப்படுத்திக்கொள்ள புதிய வழிகளைக் கண்டறிந்து வருகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Tags : #INDIA #PAKISTAN #US #IMRANKHAN #VIRENDERSEHWAG #TWEET #VIRALVIDEO #HILARIOUS