‘இனி இவர் தலைமையிலதான் விளையாட போறோம்’.. கேப்டனான பிரபல தமிழக வீரர்..! வெளியான அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 27, 2019 08:19 PM

வரயிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Dinesh Karthik to lead Tamil Nadu in Vijay Hazare Trophy 2019

உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே தொடர் வரும் செப்டம்பர் மாதம் 24 -ம் தேதி தொடங்கி அக்டோபர் 16 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணிக்கு அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வு குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர், ‘தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் மற்றும் கேப்டன்ஷி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் வெவ்வேறு விதமான போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். ஐபிஎல் தொடரில் கே.கே.ஆர்  (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அணியை கேப்டனாக இருந்து வழி நடத்தியுள்ளார். அவரது கேப்டன்ஷி திறனை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Tags : #DINESHKARTHIK #DK #TEAMINDIA #TAMILNADU #VIJAYHAZARETROPHY2019 #CAPTAIN #TNCA