‘கோயிலுக்கு போனபோது’... 'ஆழமான கிணற்றில் விழுந்து’... ‘குழந்தைகள் உள்பட பலருக்கு நேர்ந்த கோரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 18, 2019 06:41 PM

திருச்சி அருகே கிணற்றுக்குள் டாடா ஏஸ் என்ற சரக்கு வாகனம் விழுந்து ஏற்பட்ட விபத்தில், 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tata ace accident near tiruchirappalli 8 died, 9 injured

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த எஸ்.எஸ். புதூர் என்ற இடத்தில், சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோயில் திருவிழாவுக்காக சென்ற அந்த சரக்கு வாகனத்தில், சுமார் 22 பேர் பயணித்தனர். அப்போது தீடீரென டாடா ஏஸ் என்ற சரக்கு வாகனத்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஆழமான கிணற்றில் விழுந்தது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் வந்த மீட்புக்குகுவினருடன் விரைந்து வந்த போலீசார், தண்ணீர் மிகவும் குறைவாக இருந்த கிணற்றில் விழுந்த சரக்கு வாகனத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.  இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #TIRUCHY