‘மறுக்கப்பட்ட பாதை’.. ‘பாலத்தில் இருந்து கயிறு கட்டி சடலத்தை இறக்கிய அவலம்’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 21, 2019 01:37 PM

சடலத்தை எடுத்து செல்ல பாதை தர மறுத்ததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கி எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dead body was hanged down bridge in Vaniyambadi

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவர் குடும்பத்துடன் புத்துக்கோயில் பகுதியில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு குப்பன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு அவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதியில் குப்பனின் சடலத்தை அடக்கம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். அப்போது ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள நிலத்துக்கு சொந்தக்காரர் முள்வேலி அமைத்து பாதை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வேறுவழியின்றி சடலத்தை பாலத்தின் மீதிருந்து கயிறு கட்டி கீழே இறக்கி அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VELLORE #VANIYAMBADI #BRIDGE #DEADBODY